districts

img

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக மோசடி

சேலம், ஜூலை 08- வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இளை ஞர்களிடம் மூன்றரை கோடி ரூபாய் மோசடி நடைபெற்ற சம்ப வத்தில் தொடர்புடையவர்களிடமிருந்து பணத்தை மீட்டு தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று பணத்தை இழந்தவர்கள் புகார் அளித்தனர்.  சேலம் மாவட்டம் நரசோதிப்பட்டி அருகே ஆதித்யா இன்டர்நேஷனல் என்ற பெயரில் அர்ஜுன் சுனில் ஆதித்யன் என்பவர், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தியுள்ளார். தமிழக முழுவதும் 70க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் மூன்றரை கோடி ரூபாய் வரை ஏமாற்றியுள்ளதாக குற்றச்சாட்டு தெரி வித்து, இழந்த பணத்தை மீட்டு தருமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணத்தை இழந்த 20க்கும் மேற்பட் டோர் புகார் அளித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கூறுகை யில், சேலம், நாமக்கல், கரூர், கோயம்புத்தூர், பெரம்ப லூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து 70க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பொய்யான ஆவணங்களை காட்டி இந்த நிறுவனம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா போலந்து உள்ளிட்ட நாடுகளில் பொதுவான வேலை கிடைக்க ஏற்பாடு செய்வதாக, இன்ஸ்டாகிராம், முகநூல் ஆகிய சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி இளை ஞர்களை ஏமாற்றி பணத்தை பிடுங்கி உள்ளனர். இதில் பணத்தைக் கட்டிய 3 இளைஞர்களுக்கு போலி பாஸ்போர்ட் கொடுத்து  வெளிநாட்டிற்கு அனுப்பும் போது அவர்கள் டெல்லி வெளிநாட்டு தூதரகத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இதன் பின்பே தாங்கள் பணம் கட்டிய நிறு வனம் போலியானது என தமிழகத்தில் உள்ள இளைஞர்க ளுக்கு தெரியவந்துள்ளது.  இந்த நிலையில் பிடிபட்ட மூன்று இளைஞர்கள் அளித்த தகவலின் பெயரில் ஆதித்யா இன்டர்நேஷனல் நிறுவ னத்தின் உரிமையாளர் அர்ஜுன் சுனில் ஆதித்யன் கைது செய்யப்பட்டு தற்போது திகார் ஜெயிலில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டில் வேலை வேண்டி பணத்தைக் கட்டிய இளைஞர்கள் தாங்கள் கட்டிய பணத்தை மீட்டு தருமாறு சூரமங்கலம் காவல் நிலை யம் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி இன்று பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.