districts

பி.எட்., எம்.எட்.,படிப்பிற்கு மாணவர் சேர்க்கை

தஞ்சாவூர், ஜூலை 29-  

     தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல்  மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியி யல் (பி.எட்.,) இரண்டாமாண்டு முழுநேரப் பட்டப் படிப்பு மற்றும் கல்வியியல் நிறைஞர் (எம்.எட்.,) இரண் டாமாண்டு முழுநேரப் பட்டப்படிப்பிற்கு 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான நேரடிச் சேர்க்கை நடைபெற்று வரு கிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

     சேர்க்கை விண்ணப்பங்களை காலை 10 மணி முதல்  மாலை 5 மணிவரை கல்வியியல் மற்றும் மேலாண்மை யியல் துறையில் நேரிலும், தமிழ்ப் பல்கலைக்கழக இணையம் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். சேர்க்கை க்கு ஒருசில இடங்களே எஞ்சி உள்ள நிலையில், விரைந்து  விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

     மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணைய தளமான www.tamiluniversity.ac.in என்ற முகவரியி லும், 04362-226720 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு  கொள்ளலாம் என பதிவாளர் (பொ) முனைவர் சி.தியாக ராஜன் தெரிவித்தார்.