districts

img

பெரியார் மணியம்மை பல்கலை.யில் கால்பந்து, கைப்பந்து, கபாடி போட்டி

தஞ்சாவூர், பிப்.10-  தஞ்சாவூர் அருகே வல்லம், பெரியார்  மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் நிகர் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான பெரியார் மணியம்மை விளையாட்டு போட்டி, பிப்.8, 9 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கு கால்பந்து, கைப் பந்து, கபாடி போட்டிகளும், பெண்களுக்கு  கூடைப்பந்து போட்டி மட்டும் நடைபெற்றது. கபாடிப் போட்டியில், திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதலிடத்தையும், பெரி யார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் 2 ஆம் இடத்தையும் பெற்றது. கால்பந்து போட்டியில் பெரியார்  மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் முதலிடத்தையும், திருச்சி  ஜமால் முகமது கல்லூரி 2 ஆம் இடத்தையும்  பிடித்தது.  கைப்பந்து போட்டியில் கும்பகோணம் அன்னை பொறியியல் கல்லூரி முதலிடத்தை யும், சென்னை வேல்டெக் 2 ஆம் இடத்தை யும் பெற்றது. பெண்களுக்கான கூடைப்பந்து  போட்டியில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரி முதலிடத்தையும், திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி 2 ஆம் இடத்தையும் பெற்றது.  இந்நிகழ்வில், நிலா புரொமோட்டர்ஸ் நடிகர் சுதாகர், நடிகர் விஜய் கணேஷ், பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ.இராமச்சந்திரன், பதிவாளர் முனைர் பி. கே.ஸ்ரீவித்யா, நிதி ஆலோசகர் பழனிராஜன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இப்போட் டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி துறை  இயக்குநர் பேராசிரியர் ரமேஷ் செய்திருந்தார்.