districts

அரசு கல்லூரி மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி முகாம்

அறந்தாங்கி, ஏப்.19-

  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யூத்  ரெட் கிராஸ் சார்பில்   முதலுதவி தொடர்பான  ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பேரா.வீ.பால முருகன் தலைமை வகித்தார். யூத் ரெட்  கிராஸ் திட்ட அலுவலர் முனைவர் ச.கணேஷ்  குமார் வரவேற்றார். முனைவர் க.செல்வி  நன்றி கூறினார்.

   நிகழ்வில், யூத் ரெட் கிராஸ் மாநில  முதலுதவி பயிற்றுநர் துளசி.துரைமாணிக் கம், தமிழ் துறை தலைவர் முனைவர் மூ.திரு வாசகம், ஆங்கிலத் துறை தலைவர்    ஆ.கணே சன், வணிகவியல் துறை தலைவர் முனைவர்  சீனிவாசன், வணிக மேலாண்மையியல் துறை தலைவர் முனைவர் அன்பழகன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.