districts

பாபநாசம் எம்.எல்.ஏ அலுவலகம் அருகில் தீயணைப்பு நிலையம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் - கோபுராஜபுரம் மெயின் சாலையில், பாபநாசம் எம்.எல்.ஏ அலுவலகம் அருகில் தீயணைப்பு நிலையம் உள்ளது. மெயின் சாலையிலிருந்து தீயணைப்பு நிலையம் செல்லும் வழி மண் சாலையாக குண்டும், குழியுமாக இருப்பதால், வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் உள்ளது. எனவே, இந்த மண் சாலையை தார்ச் சாலையாக மாற்ற வேண்டுமென பாபநாசம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.