திருச்சிராப்பள்ளி, ஜூலை 24 -
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம், கீழப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க புதிய கிளை துவக்க விழா ஞாயிறன்று நடந் தது.
விழாவிற்கு கிளைத் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். கிளை செயலாளர் முனியாண்டி முன் னிலை வகித்தார்.
விவசாயிகள் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்தி கேயன், வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் சேதுபதி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் தங்கராசு, ஒன்றியக் குழு உறுப்பினர் பொன்.வேலுசாமி, விவசாயிகள் சங்க ஒன்றிய செய லாளர் சிவகுமார், ஒன்றியத் தலை வர் பாண்டியன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.