districts

திருச்சி முக்கிய செய்திகள்

மாணவர்களுக்கு பாராட்டு விழா

பாபநாசம், ஏப்.26 - தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் பட்டுக்கோட்டை அழகிரி  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  ஆண்டு விழா கலை நிகழ்ச்சி களில் பங்கேற்ற மாணவர் களுக்கு பாராட்டு விழா நடை பெற்றது.  பள்ளி வளாகத்தில் நடந்த  விழாவுக்கு பள்ளி அறங்காவ லர் திருநாவுக்கரசு தலைமை  வகித்துப் பேசினார். பள்ளிச்  செயலர் வரதராஜன் வரவேற் றார். பள்ளி தலைமைச் செயலர்  கலியமூர்த்தி முன்னிலை வகித் தார். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு புத்தகம், சான்றிதழ் வழங்கப் பட்டது. இதில் பள்ளி முதல்வர் தீபக், துணை முதல்வர் சித்ரா  உட்பட ஆசிரியர்கள், பெற் றோர்கள் மாணவர்கள் பங்கேற் றனர். பள்ளி நிர்வாகச் செயலர்  கைலாசம் நன்றி கூறினார்.

தையல் பயிற்சி நிறைவு

பாபநாசம், ஏப்.26 - தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் விவேகானந்தா சமூகத் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச தையல் பயிற்சி நிறைவு நிகழ்ச்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. சங்கச் செயலர் கண்ணதாசன் வரவேற்றார். வழக்கறிஞர் கண்ணன் தையல் பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசினார். பயிற்றுநர் பாத்திமா பீவி, சிறப்பு  பயிற்றுநர் லட்சுமி, பிரியா, உஷா ராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சிவக்குமார் நன்றி கூறினார்.

ஆதார் உள்ளீடு பயிற்சி

திருச்சிராப்பள்ளி, ஏப்.26- தேர்ந்தெடுக்கப்பட்ட இல்லம் தேடிக் கல்வி தன்னார் வலர்கள் 15 பேருக்கு, திருச்சி மாவட்டம் சார்பாக இரண்டு நாள் ஆதார் உள்ளீடு பயிற்சி மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் அலுவலகத்தில் நடை பெற்றது. எல்காட் நிறுவனத்தின் கருத்தாளர்கள் ராஜ்குமார், சிலம்பரசன் ஆகியோர் பயிற்சி  வழங்கினர்.  நிறைவு நாள் விழாவில் மாவட்ட உதவி அலு வலர் அன்புசேகரன் பயிற்சி பெற்றவர்களை வாழ்த்தி பேசி,  ஆதார் உள்ளீட்டுக்கு தேவை யான தொழில் நுட்பக் கருவி களை வழங்கினார். விழாவில் எமிஸ் ஒருங்கி ணைப்பாளர் வெங்கடேசன்,  எஸ்எஸ்ஏ ஒருங்கிணைப்பா ளர் சுவாமிநாதன், இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் இளஞ்சேட் சென்னி, வட்டார ஒருங்கிணைப் பாளர்கள் ஹேமலதா, பெல்  சிட்டா மேரி, சந்தியா, காந்தி  ஆகியோர் கலந்துகொண்ட னர். தன்னார்வலர் இந்திரா பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

பாபநாசம், ஏப்.26 - தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நர் பாலகணேஷ் பாபநாசம் ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்ட பணிகளை நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில், குழந்தைநேய பள்ளி கட்டட நிதி ரூ.1.24 கோடியில் கட்டப்பட்ட 8 வகுப்பறை கட்டி டம், ரெகுநாதபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ. 12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட கூட்டுறவு அங்காடி கட்டி டம், குழந்தைநேய பள்ளி கட்டிட  நிதி ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப் பறை கட்டிடம், உம்பளாப்பாடி ஊராட்சி, கருப்பூரில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும்  பாலம் கட்டும் பணி என மொத்தம் ரூ.3.7 கோடி மதிப் பீட்டில் நடந்து வரும் வளர்ச்சித் திட்ட பணியை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது பாப நாசம் பி.டி.ஓக்கள் சிவக்குமார், சுதா, ஒன்றியப் பொறியா ளர்கள், மேற்பார்வையா ளர்கள் உடனிருந்தனர்.

ஜெகதாப்பட்டினம் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

அறந்தாங்கி, ஏப்.26 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் உள்ள ஜெகதாப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் எழில்மணி மற்றும் முன்னாள் மாணவர் செய்யது சபிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அரசின் நலத்திட்டங்கள் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, கடைத்தெரு வழியாக பேரணி சென்றது. பேரணிக்காக ஏற்பாடுகளை ராஜாமுகமது, அசன், அப்பாஸ் கான், ஊர் பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர். இதில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ரம்ஜான் பேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏப்.29-இல் கோடைகால பயிற்சி முகாம்: விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு

கரூர், ஏப்.26 - மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் 29.4.2024 முதல்  13.5.2024 வரை நடைபெற உள்ளது.  இதில் விளையாட்டு வீரர், வீராங் கனைகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம், கரூர் மாவட்ட  விளையாட்டுப் பிரிவின் சார்பாக  மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில்   29.4. 2024 முதல் 13.5.2024 வரை நடை பெற உள்ளது.  இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாவட்ட அளவிலான கோடைகால  பயிற்சி முகாம் கரூர் மாவட்டத் தில் 29.4.2024 முதல் 13.5.2024 வரை தடகளம், கூடைப்பந்து, கை யுந்துபந்து, ஜூடோ, வளைகோல் பந்து மற்றும் மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளுக்கு நடைபெற உள்ளது.  முகாமில் கலந்து கொள்ள தேவையான விதிமுறைகள் முகாமில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர் மற்றும் மாண வரல்லாத 18 வயதிற்கு கீழ் உள்ள  இளைஞர்கள் கலந்து கொள்ள லாம். ஆதார் கார்டு நகலை கண்டிப் பாக சமர்ப்பித்தல் வேண்டும். முகாமில் கலந்து கொள்ளும்  அனைவருக்கும் பங்குபெற்ற தற்கான சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும்  ஒவ்வொரு நபரும் வருவாய் மெசின் மூலம் மட்டுமே    சந்தா  தொகை ரூ.200/-ஐ செலுத்த  வேண்டும். சந்தாத் தொகையா னது ரொக்கமாகப் பெறப்பட   மாட்டது.   முகாமில் கலந்து கொள்பவர்கள்  26.4.2024 அன்று காலை 6 மணி முதல் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்பவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலரின் தொலை பேசி. 7401703493 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.   எனவே கரூர் மாவட்டத்திலுள்ள விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர்/வீராங்கனைகள் அதிகளவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிராய் அதிகாரி போல் பேசி  ரூ.25 லட்சம் மோசடி

திருச்சிராப்பள்ளி, ஏப்.26 - திருச்சி புத்தூர் ரெங்கநாதபுரம் ஆபிஸர்ஸ் காலனி பகுதி யைச் சேர்ந்தவர் ஆனந்தன் (59). இவர் எல்.ஐ.சி அலுவல கத்தில் மலைக்கோட்டை கிளையின் உதவி மேலாளராக பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்று விட்டார். தற்போது தஞ்சை எல்.ஐ.சி கிளையில் விசாரணை அதி காரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப்.9  அன்று இவருடைய செல்போன் எண்ணுக்கு மர்மநபர் ஒருவர்  தொடர்பு கொண்டு, அவர் தன்னை டிராய் அதிகாரி என்றும்,  கனரா வங்கியில் உங்கள் செல்போன் எண் மற்றும் ஆதார்  எண்ணை பயன்படுத்தி ரூ.37 கோடி மதிப்பில் ஹவாலா பணப் பரிமாற்றம் செய்துள்ளதாகவும், இது தொடர்பாக சிபிஐ உங்களை விசாரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.  பின்னர் மும்பை குற்றப்பிரிவு காவலர் பேசுவதாக கூறிய  மற்றொருவரும் அதையே கூறியுள்ளார். அத்துடன் உங்கள்  மீது பிணையில் வர முடியாத இரு பிடிவாரண்ட் உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை ரிசர்வ்  வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்து வைக்கும் படியும், விசா ரணை முடிந்த பிறகு உங்கள் பணத்தை திருப்பிக் கொடுப்ப தாகவும் கூறியுள்ளனர். இதை நம்பிய ஆனந்தன் தனது வங்கிக் கணக்கில் இருந்த  ரூ.25,48,500-ஐ அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி யுள்ளார். அதன்பின் அவர் அந்த எண்ணுக்கு செல்போனில்  தொடர்பு கொண்டபோது அவர்கள் போனை எடுக்கவில்லை.  இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஆனந்தன் இது குறித்து திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில்  புகார் செய்தார். புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் ஜெயக் குமார் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர்களின்  அலுவலகங்களை திறக்க அனுமதி தருக! மமக தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை

பாபநாசம், ஏப்.26 - சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவல கங்களை திறக்க தேர்தல் ஆணையம் அனு மதிக்க வேண்டும் என மனிதநேய மக்கள்  கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலி யுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகம், தேர்தல் அறி விக்கை வெளியான மார்ச் 16 அன்று மூடி  முத்திரையிடப்பட்டது. வாக்கு எண்ணிக்கை  நடைபெறும் ஜூன் 4 வரை தேர்தல் நடத்தை  விதிமுறை செயல்பாட்டில் இருக்கும் என்ப தால் தொடர்ந்து மூடியிருக்கும்.  தமிழ்நாட்டில் பறக்கும் படைகள் கண்கா ணிப்பு மாநிலத்தின் எல்லைப் பகுதி களைத் தவிர, உட்புறங்களில் விலக்கிக்  கொள்ளப்பட்டது. முதலமைச்சர் மற்றும்  அமைச்சர்கள் தங்கள் அலுவலகங்களுக்குச் சென்று, பணியாற்றவும் தேர்தல் ஆணை யம் அனுமதித்துள்ளது.  இச்சூழலில் மக்கள் பிரதிநிதிகளான சட்ட மன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள் மட்டும் முத்திரையிடப்பட்டு மூடியிருப்பது நியாயமில்லை. மக்கள் பிரதிநிதிகளின் செயல் பாடுகளை முடக்குவது நீதியில்லை. சட்ட மன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களை திறக்க இந்தியத் தேர்தல் ஆணையம் அனு மதிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

புதுகை மாவட்டக் கல்வி அலுவலகத்தில்  ஆசிரியர்கள்  காத்திருப்புப் போராட்டம்

புதுக்கோட்டை, ஏப்.26 - புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் அலு வலகத்தில் ஆசிரியர்கள் வியாழக்கிழமை மாலை காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீரனூர் அருகேயுள்ள உதவிபெறும் பள்ளியில் பணி யாற்றும் ஆசிரியர்களுக்கான கோப்புகளில் கையெழுத்தி டுவதில் மாவட்டக் கல்வி அலுவலர் தாமதம் செய்வ தாகக் கூறி இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்  பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலை வர் ஜெயராம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர்  சுரேஷ், மாநிலத் துணைப் பொதுச் செயலர் எம்.குமரேசன்  உட்பட ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மா.மஞ்சுளா போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கிடப்பில் போடப்பட்டுள்ள கோப்புகளுக்கு விரைவில் ஒப்புதல் அளித்து ஆசிரியர்கள் எந்த வகையிலும் பாதிக் காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆசிரி யர் விரோதப் போக்கில் நடந்து கொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க  வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக்  கல்வி அலுவலர் உறுதியளித்தார். ஆனால், மாவட்டக் கல்வி அலுவலர் ரமேஷ் வரவில்லை என்பதால், அலுவல கத்தின் உள்ளே அமர்ந்து ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடமலை-மயிலையில் தொடர் மின்வெட்டு: பொதுமக்கள், விவசாயிகள் அவதி

கடமலைக்குண்டு, ஏப்.26- தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியம் கட மலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு ஆகிய பகுதி களில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாயமே முதன்மை தொழிலாக உள்ளது. அனைத்து விவசாய நிலங்களுக்கும் மின்சார  வசதி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடமலைக் குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படு கிறது. இதனால் வீடுகளில் குழந்தைகள் மற்றும் வயதா னவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மின்வெட்டு காரணமாக விவசாயிகள் பயிர்களுக்கு முழுமையாக நீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் தக்காளி செடியில் காய் பிஞ்சு உள்ளிட்டவை வெயிலில் கருகி வெம்பி வருவதால், விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் 5 மணி நேரம் வரை மின்தடை செய்யப்படு கிறது. அடிக்கடி மின்வெட்டு செய்யப்படுவதால் மின்  மோட்டார்கள் பழுதடைந்து விடுகின்றன. கட மலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்லூரி அருகே கஞ்சா விற்றவர் கைது

அருப்புக்கோட்டை, ஏப்.26- அருப்புக்கோட்டையில் கல்லூரி அருகே மாண வர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். அருப்புக்கோட்டை நகர் போலீசார் திருச்சுழி சாலை யில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள  தனியார் கல்லூரி அருகே சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தாராம். அவரைப் பிடித்து போலீசார் சோதனை நடத்தினர். அதில், அவரிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. மேலும்,  கல்லூரி மாணவர்களுக்கு அதை விற்பனை செய்ய  இருந்தாக கூறப்படுகிறது. எனவே, கஞ்சா விற்பனை செய்ய முயன்ற தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வேந்தி ரன்(56) என்பவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த  100 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா கடத்தல் வழக்கில் வாலிபருக்கு 6 ஆண்டு சிறை

தேனி, ஏப்.26- கம்பம் பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் வாலிப ருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வருசநாட்டைச் சேர்ந்த சின்னன் (30) என்பவர், கம்பம்  மெட்டு சாலையில் 10.250 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டார்.  இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை முதன்மை  மற்றும் போதை பொருள் குறித்த சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வியாழனன்று இறுதி வழக்கு விசா ரணையை முடித்து வைத்த நீதிபதி ஹரிஹர குமார், சின்னனை குற்றவாளி என நிரூபித்து, அவருக்கு 6 ஆண்டு கள் கடுங்காவல் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராத மும், அபராதத்தை கட்டத் தவறினால் ஓர் ஆண்டு மெய்க்  காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

விவசாய நிலத்திற்கு பாதை வசதி வேண்டும்: சாலை மறியலில் ஈடுபட முயன்ற பெண்கள்

அரியலூர், ஏப்.26 - குடிகாடு கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு பாதை வசதி, மலட்டேரிக்கு மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தரக் கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அரியலூர் அருகே மேலணிக்குழி குடிகாடு கிரா மத்தில் சுமார் ஆயிரத்திற் கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் வடக்கு வேலி ஓடையில் இருந்து மலட்டு ஏரி வரை தூர்வாரும் பணி கள் நடைபெற்று வரு கின்றன. இந்தப் பணிகளில் விவ சாய நிலங்களுக்கு செல்லும் பாதையை அப்புறப் படுத்தி விட்டதாகவும், இத னால் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்குச் செல்ல பாதிப்பு ஏற்படும் எனவும், எனவே ஐந்து மீட்டர் பரப்ப ளவில் ஏற்கனவே உள்ளது  போன்று பாதை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.  இதேபோன்று மலட்டு  ஏரிக் கரையை பலப்படுத்தப் படும் பணிகளின் போது,  கரையிலிருந்து எடுக்கப் பட்ட மண்ணை குடியிருப்பு பகுதிகளின் மேலே நிரப்பி,  மழைநீர் செல்ல முடியாதபடி மண்ணை அணைகட்டி வைத்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் மழை நீரானது குடியிருப்பு பகுதி களில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மழை நீர் வடிகால் வசதியை ஏற்படுத்திவிட்டு, அதன் பிறகு கரைகளை பலப் படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.  பலமுறை பொதுமக்கள் வைத்த இந்த இரு கோரிக் கைகளையும் நிறைவேற்றா ததால், மேலணிக்குழி - காட்டுமன்னார்கோயில் செல்லும் சாலையில் சுமார்  300-க்கும் மேற்பட்ட பெண்கள்  மறியலில் ஈடுபட ஆயத்த நிலையில் இருந்தனர்.  அப்போது தகவலறிந்து மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  விவசாயிகள் மற்றும் பெண் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “இன்னும் ஓரிரு தினங்கள்  கால அவகாசம் கொடுங் கள். அதற்குள் தங்களது கோரிக்கைகளை நிறை வேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர்.

பசும்பொன்னில் சிலம்பாட்டம்

இராமநாதபுரம், ஏப்.26-  இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில், பசும்பொன்  உ.முத்துராமலிங்கத் தேவர் சிந்தனை மன்றத்தின்  சார்பாக சித்ரா பௌர்ணமி திருநாளையொட்டி சிலம்பாட்டம்  நடைபெற்றது. இதற்கு தேவர் நினைவாலயம் பொறுப்பா ளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமை வகித்தார்.
 

;