தஞ்சாவூர், டிச.10 - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட மாற்றுத் திறனாளி கள் நலத்துறை சார்பில் சனிக்கிழமை மாபெரும் தனி யார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் மாநக ராட்சி மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, துணைவேந்தர் எஸ்.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில், மொத்தம் 3,257-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். 12 மாற்றுத் திறனாளி கள் உட்பட 543 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 522 பேர் இரண்டாம் கட்ட தேர்விற் கும் 73 பேர் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.