districts

img

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறப்பு

திருவாரூர், ஏப்.2 - நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தேர்தல்  பணிக்குழு அலுவலகம் திமுக தலைமையி லான இந்தியா கூட்டணி சார்பாக திருவாரூர்  மாவட்டம் குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து  நிலையம் அருகே திங்கள்கிழமை திறக்கப் பட்டது. நிகழ்ச்சிக்கு குடவாசல் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் பா.பிரபாகரன் தலைமை வகித்தார். குடவாசல் நகரச் செயலாளர் ஏ.கே.டி.சேரன் முன்னிலை வகித்தார். வலங் கைமான் ஒன்றியச் செயலாளர்கள் வீ.அன்ப ரசன், கோ.தெட்சிணாமூர்த்தி ஆகியோர் வர வேற்றனர். திருவாரூர் மாவட்ட தேர்தல்  தலைவரும், திமுக மாவட்டச் செயலாளரு மான பூண்டி கே.கலைவாணன் தேர்தல் பணிக்குழு அலுவலகத்தை திறந்து வைத்து  உரையாற்றினார். நன்னிலம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு செயலாளரும், சிபிஎம் மாவட்ட செயலாளருமான ஜி.சுந்தரமூர்த்தி, நாகை நாடாளுமன்ற தொகுதியின் சிபிஐ வேட்பா ளர் வை.செல்வராஜ், நன்னிலம் தொகுதியில்  பெருவாரியான வாக்குகள் பெற்றிடும் வகை யில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினார். நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தேர்தல்  பணிக்குழு பொதுக்குழு உறுப்பினர் ஆர்.முருகேசன், தலைவர் எஸ்.முத்துப்பிள்ளை, விசிக மாவட்டச் செயலாளர் (தெற்கு) தமிழ் ஓவியா, சிபிஎம் குடவாசல் நகரச் செயலா ளர் டி.ஜி.சேகர், காங்கிரஸ் நகரத்தலைவர் செந்தில், மதிமுக ஒன்றிய கவுன்சிலர் கோ. கோபி மற்றும் நன்னிலம், வலங்கைமான், குட வாசல் ஒன்றிய, நகர இந்தியா கூட்டணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.