அடிக்கல் நாட்டு விழா
பொன்னமராவதி, டிச.19 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி பேரூராட்சி 14- வது வார்டு மலையா ஊரணி கரையில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி முன்னிலை யில் இவ்விழா நடை பெற்றது. இதில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை மற்றும் தரை மட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியை யும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.9.15 லட்சம் மதிப் பீட்டில் குப்பைகள் சேக ரிப்பதற்கான பேட்டரி யால் இயக்கப்படும் 6 மின்கல வாகனங்களை யும் சட்டத்துறை அமைச் சர் ரகுபதி கொடிய சைத்து தொடங்கி வைத் தார்.
மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி
அரியலூர், டிச.19 - மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம், செந்துறையில் மின்சார வாரிய உப கோட்டம் சார்பில் திங்களன்று விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மின்சார வாரிய உதவி செயற்பொ றியாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். பேர ணியானது செந்துறை மின்சார வாரிய அலுவல கத்தில் தொடங்கி, பிர தான கடைவீதி வழியே சென்று பேருந்து நிலை யத்தில் நிறைவடைந்தது. பேரணியில் சென்ற ஊழி யர்கள், மின் சிக்கனம் குறித்த துண்டு பிரசுரங் களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
கால்நடை சுகாதார முகாம்
அரியலூர், டிச.19 - அரியலூரை அடுத்த அயன் ஆத்தூர் கிரா மத்தில், கால்நடை பரா மரிப்புத் துறை சார்பில், சிறப்பு கால்நடை சுகா தார மற்றும் விழிப்பு ணர்வு முகாம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. அரியலூர் கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்கு நர் ரிச்சர்டு ராஜ் முன்னி லையில் நடைபெற்ற இந்த முகாமில், 233 பசு மாடுகள், 7 எருமை மாடு கள், 152 செம்மறி ஆடு கள், 491 வெள்ளாடு கள் என 1083 கால்நடை களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் நடந்த கன்றுகள் பேரணியில், 27 பசுங் கன்றுகள் கலந்து கொண் டன. இதில் சிறப்பாக பராமரிக்கப்பட்ட 10 கிடாரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
செயல்முறை விளக்க மையம் திறப்பு
அரியலூர், டிச.19 - அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் அமைக் கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திர செயல் முறை விளக்க மையத்தை ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா திங்களன்று திறந்து வைத்து, இயந்திர செயல்முறையை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் பூங்கோதை, தேர்தல் வட்டாட்சியர் உள்ளிட் டோர் கலந்து கொண்ட னர்.
செந்துறை அரசுப் பள்ளிக்கு உணவுக் கூடம், ஸ்மார்ட் வகுப்பறை, குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கல்
அரியலூர், டிச.19 - அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் ஆசிரியர்கள் சார்பில் புதிதாக கட்டப்பட்ட உணவுக் கூடம், ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு கருவி செயல்பாடு தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அப்பள்ளியில் பணிபுரிந்த முன்னாள் தலை மையாசிரியர்கள் வி.சோமசுந்தரம், த.சகுந்தலா, ஆசிரியர் த.சரஸ்வதி ஆகியோர் ஒன்றிணைந்து பள்ளி வளாகத்தில் ரூ.22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உணவுக் கூடம், ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு கருவி ஆகிய வற்றை பள்ளிக்கு ஒப்படைத்தனர். நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் சோ. செல்வவிநாயகம் தலைமை வகித்தார். ஊராட்சித் தலை வர் செல்லம் கடம்பன், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் குப்புசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி உணவு கூடத்தையும், மாவட்ட கல்வி அலுவலர் க.ஜெயா ஸ்மார்ட் வகுப்பறையையும் திறந்து வைத்தனர்.
அரியலூரில் முந்திரிக் கொட்டை தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தல்
அரியலூர், டிச.19 - அரியலூர் மாவட்டத்தில் முந்திரிக் கொட்டை தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். அரியலூரில் செவ்வாய்க்கிழமை நடந்த ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் கூட்டத்தில், “உடையார்பாளையம், செந் துறை, ஆண்டிமடம் ஆகியவற்றில் ஒரு பகுதியை மையமாகக் கொண்டு, அங்கு முந்திரிக் கொட்டை உடைக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். முந்திரிக்கு பயிர் காப்பீடு திட்டம் கொண்டு வரவேண்டும். படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச் சோளம் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட பருத்தி பயிர்களுக்கும் காப்பீடு தொகை பெற்றுத் தரவேண்டும். அரியலூர் மாவட்டத்திலுள்ள சிமெண்ட் ஆலைகளால் நிலத்தடி நீர்மட்டம் 500-அடிக்கு கீழே சென்று விட்டது. எனவே, இனிவரும் காலங்களில் புதிய சுரங்கங்கள் தோண்டு வதை நிறுத்த வேண்டும். செந்துறையில் முந்திரி பழச்சாறு தொழிற்சாலையும், கடலை மண்டியும், சுத்தமல்லியில் ஒரு கடலை மண்டி யும் அமைக்க வேண்டும். விவசாயிகளின் உரிமைகளுக்காக போராடும் விவசாயிகள் மீதும், அதன் தலை வர்கள் மீதும் வழக்குப் பதிவதையும், குண்டர் சட்டத்தில் கைது செய்வதையும் தமிழக அரசு கைவிட வேண்டும். மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதியான திருமானூர், தா.பழூர் பகுதிகளில் நிகழாண்டு தண்ணீர் இல்லாத தால் சம்பா பயிர் சாகுபடி பொய்த்துவிட்டது. ஆகையால் ஏக்கருக்கு ரூ.40,000 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அரியலூர் அருகேயுள்ள கொள்ளிடத் திலும், செந்துறை அருகேயுள்ள வெள்ளாற் றிலும் மணல் எடுக்க மாவட்ட ஆட்சியர் அனு மதி அளிக்கக் கூடாது. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சாரத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன் தலைமை வகித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி
புதுக்கோட்டை, டிச.19 - புதுக்கோட்டை மாவட்டத்தில் எப்போது மழை வந்தா லும் அதனை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்கிறோம் என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி. புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டியில், “ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் கப்பல்படை, விமானப்படை, தரைப்படை எல்லாம் இருக்கிறது. அதனைக் கூட்டி ஆளுநர் ஆலோசனை நடத்துவதில் எங்களுக்கு ஒன்றும் இல்லை. வெள்ள நிவாரணப் பணிகள், மக்களை மீட்கும் பணி களில் அமைச்சர்கள், அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் எப்போது மழை வந்தாலும் அதனை சமாளிக் கவும் எதிர்கொள்ளவும் போதுமான முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் தயாராக இருக்கிறது. மக்களைப் பாது காத்திட தயாராக இருக்கிறோம்” என்றார்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தரக் கோரி மனு
அரியலூர், டிச.19 - அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த சோழன் குறிச்சி இருளர் இன மக்கள், தங்கள் பகுதியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைத்துத் தரக் கோரி ஆட்சியர் ஜா. ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் திங்களன்று மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், “எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்க ளுக்கு ஊராட்சி நிர்வாகத்தினர் மினி டேங்க மூலம் விநி யோகிக்கும் குடிநீர் போதுமானதாக இல்லை. எனவே, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி கூடுதலாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்கள் கிராமத்தில் சாலை மற்றும் வடிகால் வசதி களை ஏற்படுத்தித் தர வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
மணல் திருட்டு: விவசாயி மீது தாக்குதல்
தஞ்சாவூர், டிச.19- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கட்டையங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ் (64). இவரது நிலத்தின் அருகே அக்னி ஆறு என்னும் காட்டாறு செல்கிறது. இந்த காட்டாற்றில், பட்டுக்கோட்டையை அடுத்த கழுகுப்புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ், மணி உள்ளிட்ட 4 பேர் அனுமதியின்றி மணல் அள்ளியதாக கூறப்படுகிறது. இதை தட்டிக் கேட்ட விவசாயி செல்வ ராஜை நான்கு பேரும் சேர்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விவசாயி செல்வ ராஜ் அளித்த புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து நான்கு பேரையும் தேடி வரு கின்றனர்.
இளைஞர் தவறவிட்ட மடிக்கணினி: மீட்டுக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்
தஞ்சாவூர், டிச.19 - தஞ்சாவூர் இ.பி காலனி பகுதியைச் சேர்ந்த மணி கண்டன் (25), மீன் விற்பனைத் தொழிலில் பங்குதார ராக உள்ளார். இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மடிக்கணினியை வழியில் எங்கோ தவறவிட்டு விட்டார். அப்போது அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுநர் சிவா, அந்த மடிக்கணினியை கண்டெடுத்து, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதாவிடம் ஒப்படைத்தார். இதற்கிடையில், திங்கள்கிழமை காலை மணி கண்டன் கிழக்கு காவல் நிலையத்தில் மடிக்கணினி காணா மல் போனது குறித்து புகார் அளித்தார். தொடர்ந்து விசா ரணை நடத்திய காவல் ஆய்வாளர், ஆட்டோ ஓட்டுநர் கொண்டு வந்து ஒப்படைத்த மடிக்கணினி மணிகண்ட னுக்குச் சொந்தமானதுதான் என தெரியவந்தது. இதை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் சிவாவை, கிழக்கு காவல் நிலையத்துக்கு வரவழைத்து, அவரது முன்னிலை யில் மணிகண்டனிடம் மடிக்கணினியை ஆய்வாளர் சுதா ஒப்படைத்தார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் சிவாவை காவல்துறையினர் பாராட்டினர். தனது மடிக்கணினியை மீட்டுக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் சிவாவுக்கு மணி கண்டன் நன்றி கூறினார்.
பாபநாசத்தில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்
பாபநாசம், டிச.19 - பாபநாசத்தில் டிச.21 அன்று மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது என தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பாபநாசம் சிந்தாமணி திருமண மண்டபத்தில் டிசம்பர் 21 அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை ‘மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்’ நடைபெறு கிறது. இதில் மின்வாரியம், வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, காவல்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை, சமூக நல மற்றும் மகளிர் உரிமைத் துறை உள்ளிட்ட பல்வேறு சேவை களுக்காக இந்த முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் பாபநாசம் பேரூராட்சிப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும், தேவையான ஆவ ணங்களுடன் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை யினை கணினியில் பதிவு செய்து தீர்வு பெறலாம்” என கூறப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் தொடர் மழை எதிரொலி: ரயில்கள் ரத்து
மதுரை, டிச.19- திருநெல்வேலி, தூத்துக்குடி, தென் காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்க ளில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற் பட்டுள்ள வெள்ளத்தால் ரயில் பாதையில் சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல ரயில்கள் முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்படுகிறது. இதன்படி திருநெல்வேலி-செங் கோட்டை பிரிவில் இரு மார்க்கத்திலும் திங்களன்று இயக்கப்பட வேண்டிய முன்ப திவில்லாத சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் வாஞ்சி மணியாச்சி- திருச்செந்தூர்-வாஞ்சி மணி யாச்சி முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. டிசம்பர் 18 அன்று திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய ஸ்ரீ வைஷ்ணவி கட்ரா எக்ஸ்பிரஸ் ரயிலும் மறு மார்க்கத்தில் டிசம்பர் 21 அன்று ஸ்ரீ வைஷ்ணவி கட்ரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலும் முழு மையாக இருந்து செய்யப்படுகிறது. டிசம்பர் 18 அன்று இயக்கப்பட வேண் டிய திருநெல்வேலி-பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் மற்றும் கன்னியாகுமரி-புதுச் சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. திருவனந்தபுரம்-திருச்சி இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. டிசம்பர் 18 அன்று நாகர்கோவில்-கோயம்புத்தூர் இரவு நேர எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-மதுரை இடையே பகுதி யாக ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து இயக்கப்படும். அதேபோல கன்னியாகுமரி- சென்னை எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி-மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப் பட்டு மதுரையிலிருந்து இயக்கப்படும். நாகர்கோவில்-தாம்பரம் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-பெங்களூர் எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி-தாதர் எக்ஸ்பிரஸ், தூத் துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் -சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ், திரு நெல்வேலி-சென்னை நெல்லை எக்ஸ் பிரஸ், தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் டிசம்பர் 18 அன்று மதுரையில் இருந்து இயக்கப்படு கின்றன. நாகர்கோவில்-கோயம்புத்தூர் பகல் நேர எக்ஸ்பிரஸ் திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்பட்டது. கொல்லம்-சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் இருந்து இயக்கப்படும். திருநெல்வேலி- ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்திலி ருந்து இயக்கப்பட்டது. திருநெல்வேலி, மானாமதுரை, பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட வேண்டிய செங்கோட்டை-தாம்பரம் ரயில் இராஜபாளையம், விருது நகர், மானாமதுரை வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.
மாவட்ட மைய நூலகத்திற்கு தரங்கம்பாடி சாலையில் இடம் ஒதுக்குக! ஜன.4 இல் மாபெரும் சாலை மறியல் போராட்டம்
மயிலாடுதுறை, டிச.19- மயிலாடுதுறை மாவட்டத்தின் மைய நூலகத்திற்கான கட்டிடம் கட்டுவதற்கு நகரின் மைய பகுதியான தரங்கம்பாடி சாலை யிலுள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஒதுக்கக் கோரி ஜனவரி 4 அன்று மயிலாடு துறையில் மாபெரும் சாலை மறியல் போராட்டத்தை நடத்துவதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 19 அமைப்பு கள் முடிவு செய்துள்ளன. தமிழ்நாட்டில் புதிதாக உருவான மாவட்டங்களில் மயிலாடுதுறையும் ஒன்று. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, பிரம்மாண்டமான அலு வலகத்திற்கான கட்டுமானப் பணிகள் நிறை வடைய உள்ளன. இந்நிலையில் மாவட்ட மைய நூலகம் கட்டுவதற்காக நூலகத்துறை சார்பில் 6 கோடி ரூபாய் நிதி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்வதில் மயிலாடுதுறை நகராட்சி நிர்வா கம் அலட்சியமாக செயல்படுகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகள், அமைச்சர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரிடமும் மனுக் கள் வாயிலாகவும், நேரிலும் கோரிக்கை கள் குறித்து தொடர்ந்து வலியுறுத்தப் பட்டது. இந்நிலையில், மாணவர்கள், புத்தக வாசிப்பாளர்கள் எளிதில் சென்று பயன்படுத் தாத முடியாத பகுதியில் மைய நூலக கட்டிடத் திற்கான இடத்தினை தேர்வு செய்தனர். இதுகுறித்து அறிந்த சிபிஎம், திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 19 அமைப்புகள் ஒன்றிணைந்து, தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறை நகராட்சிக்கு சொந்தமான சர்வே எண்.184/1C பகுதியில் இடத்தை ஒதுக்கக் கோரி மாவட்ட ஆட்சி யர் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். அதன் பிறகும் நகராட்சி நிர்வாகம் மாவட்ட மைய நூலகத்தை ஒரு பொருட்டாக கருதாமல், கட்டிடம் கட்டுவதற்கான இடத் தையும் தேர்வு செய்யாமல் அலட்சியம் காட்டி வருகிறது. இதைக் கண்டித்தும் உடனடியாக நக ராட்சி நிர்வாகம் பள்ளி, கல்லூரிகளுக்கு மத்தி யில் உள்ள தரங்கம்பாடி சாலையில் மைய நூலகத்தை கட்ட இடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியும் 2024 ஜனவரி 4 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் 19 அமைப்புகள் பங்கேற்கும் மாபெரும் சாலை மறியல் போராட்டத்தை நடத்துவ தென முடிவு செய்துள்ளனர்.