திருச்சிராப்பள்ளி, செப்.25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தில் செயலிழந்த பத்துக்கும் மேற் பட்ட கணினிகள் சரிசெய்யப் பட்டன. திருச்சிராப்பள்ளி ஆட்சி யர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மக்கள் அளிக்கும் மனுக்களை ஆட் சியர்- அதிகாரிகளிடம் கொடுப்பதற்கு முன் பதிவு செய்யவேண்டும். திங்க ளன்று மனுக்களைப் பதிவு செய்யும் பத்துக்கும் மேற் பட்ட கணினிகள் ஒரே நேரத் தில் செயலிழந்ததால் சுமார் இரண்டு மணிநேரம் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற் பட்டதோடு தள்ளுமுள்ளு-வாக்குவாதமும் ஏற்பட்டது. பழுதடைந்த கணினிகளை உடனடியாகச் சரிசெய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டரங்கம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதைத் தொடர்ந்து கணினிகள் சரிசெய்யப்பட் டன.