நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேரு போட்டியிடுகிறார். இவரை, கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துறையூர் சட்டமன்ற தொகுதியில் புத்தனம்பட்டி, கோட்டூர், அபிநமங்கலம், பகலவாடி, காளிப்பட்டி, அம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தார்.