districts

img

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு: அனைத்துக் கட்சி பேரணி, இரங்கல் கூட்டம்

திருவாரூர், டிச.29 - தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு அனைத்து கட்சிகள் சார்பில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகில் நினைவஞ்சலி பேரணி, இரங்கல் கூட்டம் நடைபெற்றது. குடவாசல் ஓகை ஆற்றுப்பாலத்தில் இருந்து புறப்பட்ட அமைதி ஊர்வலம், வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் நடந்த இரங்கல் கூட்டத்திற்கு தேமுதிக குடவாசல் நகர பொறுப்பாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் பா.பிரபாகரன், தலைமை குழு உறுப்பினர் ஆர்.முருகேசன், சிபிஎம் நகரச் செயலாளர் டி.ஜி.சேகர், மாவட்டக் குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா, ஒன்றியச் செயலாளர் எம்.கோபிநாத் உட்பட அனைத்து கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் இரங்கல் உரையாற்றினர். பேரணி மற்றும் இரங்கல் கூட்டத்தில் அரசியல் பாகுபாடின்றி அனைவரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.