districts

img

முதல்வர் பிறந்த நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மயிலாடுதுறை, மார்ச் 2 - தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 72 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மயி லாடுதுறை மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் அறிவுறுத்தலின்பேரில், செம்பை தெற்கு ஒன்றிய  செயலாளர் எம்.அப்துல் மாலிக் தலைமையில், திருக்களாச் சேரி ஊராட்சி ஆயப்பாடி, கொத்தங்குடி ஊராட்சி வேலம் புதுக்குடி, ஈச்சங்குடி ஊராட்சி கடலி, திருக்களாச்சேரி, நெடு வாசல், உத்திரங்குடி, சங்கரன்பந்தல் உள்ளிட்ட ஊராட்சி களில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.   முன்னதாக பொதுமக்களுக்கு இனிப்புகள், புடவை, மரக் கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டன.