அரியலூர், ஏப்.23- அரியலூர் மாவட்டத்தில் மிகவும் பழமை யான சின்னங் கள் தொடர்ச்சி யாகக் கண்டறியப் பட்டு வரு கின்றன. அந்த வரிசையில் உடையார்பாளையம் அருகே உள்ள பெரியார் சமத்துவபுரம் பகுதியில் பழங்கால சிலை ஒன்று உள்ளதாக ஜெ.தத்தனூர் பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர் தகவல் அளித்தார். அதன்பேரில் அரியலூர் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் மணியன் கலியமூர்த்தி தலைமையிலான குழுவினர் இந்த பகுதி களில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி உடையார்பாளையம் அருகில் கீழவெளி சமத்துவபுரம் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் மண்ணில் சாய்ந்த படி ஒரு பலகை குறுஞ்சிற்பம் காணப்பட்டது. அந்தச் சிற்பத்தை ஆய்வு செய்தபோது அது 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்தியது என்று கருத முடிகிறது. இந்த சிற்பத்தைச் சுற்றிலும் குதிரை, யானை மற்றும் வீரர் வீராங்கனைகள் என சோழர்கள் மற்றும் நாயக்கர் கள் காலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அழகிய வேலைப்பாடுள்ள சிற்பங்கள் காணப்படுகின்றன. வரலாற்று ஆய்வாளர்கள் சங்கம் மற்றும் அரியலூர் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்கள் முனைவர் மதுரை வீரன், பூபதி, கோவிந்த், யுவராஜ், ரங்கதுரை, ரவீந்திரன், வடிவேல், கண்ணன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் இந்த மேற்பரப்பு கள ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.