districts

img

70 வயது நிறைவடைந்தோருக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூலை 18 -

     தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 70  வயது நிறைவடைந்தவர்களுக்கு கூடுதல் ஓய்வூ தியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், வனக்காவலர், ஊராட்சி உதவியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்களுக்கு ரூ.7,850 குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும்.  

    மருத்துவக் காப்பீட்டு திட்ட செலவினை திரும்பப் பெறும் மனுக்கள் மீது விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் செவ்வாய்க் கிழமை மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற போராட்டத்திற்கு சங்க மாவட்ட  தலைவர் சிராஜுதீன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாநிலச் செயலாளர் செந்தமிழ் செல்வன், மணப்பாறை வட்டக் கிளை தலைவர் வெள்ளைச்சாமி, ஐயப்பன் நகர்  கிளை துணைத் தலைவர் நாகராஜன், மண்ணச்சநல்லூர் வட்டக் கிளை தலைவர் சுப்பிரமணியன், துறையூர் வட்டக் கிளை செய லாளர் ராஜப்பா ஆகியோர் பேசினர்.  

புதுக்கோட்டை

    புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற  போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர்  மு.முத்தையா தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி மாவட்டச் செயலாளர் வெள்ளைச் சாமி மற்றும் நிர்வாகிகள் பேசினர். போராட் டத்தை ஆதரித்து எல்ஐசி ஓய்வூதியர் சங்க நிர்வாகி  ரகுமான், சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் மலர்விழி, போக்குவரத்து ஓய்வூதி யர் சங்க மண்டல நிர்வாகி இளங்கோ உள்ளிட் டோர் பேசினர்.

திருவாரூர்

     திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ஏ.பெத்தபெருமாள் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வீ.முனியன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சங்கத்தின் மாநிலச் செய லாளர் குரு.சந்திரசேகரன் நிறைவுரையாற்றினார்.