districts

img

தஞ்சை ஆட்சியராக தீபக் ஜேக்கப் பொறுப்பேற்பு

தஞ்சாவூர், மே 24 -  

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யராக தீபக் ஜேக்கப் புதன் கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். தீபக் ஜேக்கப் இதற்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வந்தார்.  தஞ்சை மாவட்ட ஆட்சிய ராக இதுவரை பணியாற்றி வந்த, தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பத்திரப் பதிவுத் துறை தலைவராக சென்னைக்கு பணியிட மாறுதலில் சென்ற நிலையில், புதிய ஆட்சியராக தீபக் ஜேக்கப் பொறுப் பேற்றுள்ளார்.

      அவருக்கு கூடுதல் ஆட்சியர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த்  (வளர்ச்சி) மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.  பதவி ஏற்று கொண்ட பின், ஆட்சியர் தீபக் ஜேக்கப் செய்தியாளர்களிடம் கூறுகை யில், “பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தை யும், உயர் அலுவலர்களுடன் கலந்தாலோசித்து விரைவில் தீர்க்கப்படும்.

     மாவட்டத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருப் பின், செய்தியாளர்கள் எனது கவனத்திற்கு நேரடியாக கொண்டு வந்தால், உடனடி யாக நடவடிக்கை எடுக்கப் படும்.  தஞ்சாவூரில், மதுபானம் அருந்தி  இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர் பாக காவல்துறைவிசாரணை நடைபெற்று வருகிறது.

    விசாரணை அறிக்கையை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2014-15 ஆம் ஆண்டில் தஞ்சையில் உதவி ஆட்சியராக பயிற்சி பெற்றுள்ளேன்.  தஞ்சையில் மணல் கடத்தலை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.