districts

img

விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்

சிபிஎம் சாலை மறியல் நாகப்பட்டினம்,  அக்.3 - விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க கோரி சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது.  நாகப்பட்டினம் மாவட் டம் கீழையூர் ஒன்றிய பகுதி களில் உள்ள விவசாயி களுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்காமல், புறக் கணிக்கப்படுகின்றனர். 2022-23 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் வழங்க வேண்டும். உரிய முறை யில் கணக்கீடு செய்து,  பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கீழை யூர் கடைத்தெருவில் சாலை  மறியல் போராட்டம் நடை பெற்றது. கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, கீழையூர் மேற்கு ஒன்றியச்  செயலாளர் டி.வெங்கட்ரா மன், மாவட்டக் குழு உறுப்பி னர் கே.சித்தார்த்தன் உள் ளிட்டோர் மறியலில் ஈடுபட்ட னர். பின்னர், கீழ்வேளூர் வட்டாட்சியர் க.ரமேஷ் மற்றும் வருவாய்த் துறையி னர், காப்பீடு நிறுவனங்கள், காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில் சாலை மறியல்  தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டது. மறியலின் போது மாவட் டச் செயலாளர் வி.மாரி முத்து கூறுகையில், “பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக பயிர் காப் பீட்டுத் தொகை வழங்க வேண் டும். தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அனுமதிக்கா மல், பயிர் காப்பீட்டை அரசை ஏற்று நடத்த வேண் டும். தமிழ்நாடு அரசு அதற் கென நிறுவனத்தை தொ டங்கி, பயிர் காப்பீட்டை நடை முறைப்படுத்தினால் விவ சாயிகள் பயன்பெறுவர்” என்றார்.