புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலைசிவபுரியில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன் இல்ல திருமண விழா ஞாயிறன்று ஒன்றியக் குழு உறுப்பினர் மி.ராமசாமி தலைமையில் நடைபெற்றது. அப்ரின் பானு-முபாரக் இணையர்களை வாழ்த்தி கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் ஆகியோர் பேசினர். விழாவில் இந்தியா கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.