districts

img

சிபிஎம் மூத்த தலைவர் பி.ஆரோக்கியசாமி காலமானார்

மயிலாடுதுறை, செப்.22-  மயிலாடுதுறை  மாவட் டம் குத்தாலம் ஒன்றியம் கருப் பூர் ஊராட்சி கரைக்கண்டம் கிராமத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான பி.ஆரோக்கியசாமி (வயது  97) வியாழனன்று  காலமா னார்.  ஒன்றுபட்ட தஞ்சை மாவட் டமாக இருந்தபோது மயி லாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் ஒன்றுபட்ட வட்டக்  குழுவின்  உறுப்பினராகவும், விவசாய சங்க வட்டக் குழு  உறுப்பினராகவும், கட்சி யின் கிளைச் செயலாளராக வும் பொறுப்பு வகித்த வர்.1958 ஆம் ஆண்டு மயி லாடுதுறையில் நடந்த11-ஆவது அகில இந்திய விவ சாயிகள் சங்க மாநாட்டில் செந்தொண்டர் படை தலை வராக திறம்பட செயல்பட்ட வர்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னுடைய அர சியல் பணியை துவக்கிய வர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட்  கட்சி உதயமான போது தன்னையும், தனது கிராமத்தையும் கட்சியில் இணைத்துக் கொண்டார். குத்தகை விவசாயிகள் போராட்டம், சருகை சதி  வழக்கு, கோனார் ராஜபுரம்  சதி வழக்கு உள்ளிட்ட வழக் குகளில் ஜி.பாரதிமோகன், ஏ.எம்.கோபு, மணலி  கந்தசாமி, ஜீ.வீரைய்யன், கே.ஆர்.ஞானசம்பந்தம் உள்ளிட்ட தலைவர்கள் தலை மறைவு வாழ்க்கை யின் போது அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தவர் ஆரோக்கியசாமி.  அவருக்கு 4 பெண் குழந் தைகளும், 2 ஆண் குழந்தை களும்  உள்ளனர். கருப்பூர்   ஊராட்சியில்  தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பலமுறை போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்ட தற்கு முக்கிய பங்காற்றிய வர் தோழர்.ஆரோக்கிய சாமி என்பது குறிப்பிடத் தக்கது.  அன்னாரது மறைவு செய்தியறிந்த கட்சியின் மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர் எஸ்.துரை ராஜ், ஒன்றியச் செயலா ளர் சி.விஜயகாந்த்,  டி.கணே சன், மாவட்டக் குழு உறுப்பி னர் பி.பாஸ்கரன்,  ஒன்றியக் குழு உறுப்பினர் கே.என். ஸ்டாலின், கிளை செயலா ளர் ராதாகிருஷ்ணன் ஆகி யோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

;