districts

img

நவீன சேமிப்புக் கிடங்கின் உட்புற சாலையை தார்ச்சாலையாக மாற்ற சிபிஎம் கோரிக்கை

திருவாரூர், மார்ச் 3- திருவாரூர் மாவட்டம் குடவாசலில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழ கம் நவீன சேமிப்பு கிடங்கின் உட்புறச்  சாலை மண் சாலையாக உள்ளது. இதனை தார்ச் சாலையாக மாற்றி அமைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத் துள்ளது. இதுகுறித்து கட்சியின் திருவாரூர்  மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: குடவாசல் அருகே சேங்காலிபுரம் செல்லும் சாலையில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் 25 ஆயி ரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட  நவீன சேமிப்பு கிடங்கு இயங்குகிறது. தமிழ்நாடு அரசின் நேரடி கொள் முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யும் நெல் முட்டைகளை நூற்றுக்கும்  மேற்பட்ட லாரிகள் மூலம், குடவாசல் நவீன சேமிப்பில் கிடங்கில் சேமிக்கப் படுகிறது.

இந்த நவீன சேமிப்பு கிடங்கின் நுழைவுச் சாலை மற்றும் உட் புறம் சாலை மண் சாலையாக மிக மோசமான நிலையில் உள்ளது.  சேமிப்பு கிடங்கிற்கு நெல் மூட்டை களை இறக்கி, ஏற்ற வந்து செல்லும்  லாரிகள் வரும்போது மண் துகள்கள்  பறந்து புழுதி ஏற்படுகிறது. இதனால்  அங்கு பணியில் உள்ள ஊழியர்கள் சுகா தாரமின்றி பணிபுரியும் நிலை உள்ளது. இங்கு பணிபுரியும், அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் லோடுமேன் உள்ளிட்ட அனைவருக்கும் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு, மன உளைச்சலு டன் பணிபுரிந்து வருகின்றனர். இச்சாலை மண் சாலையாக இருப்ப தால், மழைக்காலங்களில் நெல் முட்டை களுடன் (லோடுடன்) வரும் லாரிகள் சேறும், சகதியுமாக உள்ள பாதையில் சிக்கிக் கொள்கின்றன. இங்குள்ள தொழிலாளர்கள் மிகவும் சிரமத்துடன் லாரியை மீட்கும் நடவடிக்கையில் ஈடு படுவது தொடர் கதையாக உள்ளது.  எனவே மாவட்ட முதுநில மண்டல  மேலாளர் கள ஆய்வு செய்து நுழை வாயில் மற்றும் கிடங்கு உட்பகுதி களில் உடனே தார்ச்சாலை அமைக்க நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் கட்சியின் சார்பாக நவீன சேமிப்பு கிடங்கு முன்பு போராட் டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது, குடவாசல் நகரச் செயலாளர் டி.ஜி.சேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நகரச் செயலாளர் டி.ஏ. சரவணன் மற்றும் நகரக் குழு உறுப்பி னர்கள் உடனிருந்தனர்.