districts

img

மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.20 - அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக, ஆட்சி மொழியாக, தொடர்பு  மொழியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கற்றல் முறைகளை மறுத லித்து, தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளை லாபம் அடிக்க வழிவகை செய்யும், மத்திய பல்கலைக் கழகங்களில்  நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை மாநிலம்  தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மலைக்கோட்டை பகுதி செயலாளர் ராமர் தலைமை வகித்தார். மத்திய குழு உறுப்பி னர் பெ.சண்முகம், மாநகர் மாவட்டச் செயலா ளர் ராஜா பங்கேற்றனர். பொன்மலை மேலக் கல்கண்டார் கோட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி  செயலாளர் விஜயேந்திரன் தலைமை வகித் தார். மாநில குழு உறுப்பினர் சாமி.நடரா ஜன் பங்கேற்றார், திருவெறும்பூர் கடை வீதியில் தாலுகா செயலாளர் மல்லிகா  தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில குழு உறுப்பினர் ரவீந்திரன் பங்கேற்றார்.                                                                                                            புதுக்கோட்டை
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராம லிங்கம் கண்டன உரையாற்றினார்.                                             தஞ்சாவூர் 
தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்  சின்னை.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர்  மற்றும் கீழையூர் கடைத்தெருவில் நடந்த  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலா ளர் வி.மாரிமுத்து கண்டன உரையாற்றி னார். அவுரித்திடல், பாப்பாகோவில், திருப்பூண்டியிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
மீன்சுருட்டி
மீன்சுருட்டி கடைவீதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜெயங்கொண் டம் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடா சலம் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் எம்.இளங்கோவன் பங்கேற்றார்.
கரூர்
கரூர் மாநகரக் குழு சார்பில் கரூர்  பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு கட்சியின் மாநகரச் செயலா ளர் எம்.தண்டபாணி தலைமை வகித்தார்.  மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு  கண்டன உரையாற்றினார். வேலாயு தம்பாளையம் ரவுண்டானா, அரவக்குறிச்சி யிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்க ளில் கட்சியின் மாவட்டக்குழு, மாவட்ட செயற்குழு, ஒன்றியக் குழு, பகுதிக்குழு, இடைக்கமிட்டி உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

;