districts

img

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுக! - திருச்சியில் சிபிஎம் மனு கொடுக்கும் இயக்கம்

திருச்சிராப்பள்ளி, நவ.27 - சேவை துறையான மின் துறையை தனியாருக்கு வழங்கக்  கூடாது. ஏழை, எளிய மக்கள், விவ சாயிகளுக்கு வழங்கப்படும் மானி யத்தை துண்டிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று திருச்சி  மாவட்டம் முழுவதும் மனு கொடுக்கும் இயக்கம் நடை பெற்றது. தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறி யாளர் அலுவலகத்தில் நடந்த  இயக்கத்திற்கு பகுதிச் செயலாளர்கள் மேற்கு ரபீக்அஹ மது, மலைக்கோட்டை லெனின், பாலக்கரை சுரேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்க ராஜன், ராமச்சந்திரன், மாவட்டக்  குழு உறுப்பினர் சிவா உள்ளிட்டோர் மின்வாரிய செயற் பொறியாளரிடம் மனு கொடுத்த னர்.  மன்னார்புரம் மின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மனு கொடுக்கும் இயக்கத்திற்கு பகுதிச் செய லாளர்கள் அபிஷேகபுரம் வேலுச் சாமி, பொன்மலை விஜ யேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா உள்பட  பலர் 1170 மனுக்களை கொடுத்த னர்.  ஸ்ரீரங்கம் மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா தலைமையில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. இதில் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்டக் குழு உறுப்பினர் சந்தானம் உள் ளிட்டோர் மனு கொடுத்தனர்.  திருவெறும்பூர் ஒன்றியம் துவாக்குடியில் ஒன்றியச் செய லாளர் மல்லிகா தலைமையி லும், நவல்பட்டில் மாவட்டக்குழு  உறுப்பினர் தெய்வநீதி தலைமை யிலும், திருவெறும்பூரில் காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கணேசன், முருகேசன் ஆகி யோர் தலைமையிலும் மனு கொடுக்கும் இயக்கம் நடந்தது.  துறையூரில் ஒன்றியச் செய லாளர் ஆனந்தன் தலைமையில் நடந்த மனு கொடுக்கும் இயக் கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். தா. பேட்டை ஊரக்கரையில் ஒன்றியச்  செயலாளர் பாண்டியன் தலைமை யில் நடந்த இயக்கத்தில் மாவட்டக்  குழு உறுப்பினர் பாலகுமரன் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

திருத்துறைப்பூண்டியில் பிரச்சாரப் பயணம்

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக கைவிடக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி, மாவட்டக் குழு உறுப்பினர் சாமிநாதன், நகரச் செயலாளர் கோபு, ஒன்றியச் செயலாளர் காரல்மார்க்ஸ், நகர்மன்ற துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் நகரக் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் துண்டுப் பிரசுரம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.