கும்பகோணம், மார்ச் 10- மதங்களைக் கடந்து, மனிதத்தை பேணிட எப்போதும் இடதுசாரி, முற்போக்கு சிந்தனையாளர்களோடு கரம் கோர்க்கும், மக்களின் பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய முதன்மை மதகுருவாக இருந்து, கும்பகோணம் மறை மாவட்ட ஆயராக பதவி ஏற்றுள்ளார் மேதகு ஆயர் ஜீவானந்தம் அமலநாதன். இவரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தலைவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், கும்பகோணம் மாநகரக் குழு உறுப்பினர்கள் ஆர்.ராஜகோபாலன், பழ.அன்புமணி மற்றும் ஆசிரியர் வினிதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.