மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாநகரக் குழு உறுப்பினர் எஸ்.ராமகிருஷ்ணன்-லட்சுமி இல்ல திருமண விழா கோடங்கிபட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மணமக்கள் ஆர்.ராஜேந்திர பிரசாத் - எஸ்.மோகனசுந்தரி ஆகியோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், சி.முருகேசன் உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.