districts

img

காங்கிரஸ் வேட்பாளர் சுதாவுக்கு ஆதரவாக திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியத்தில் சிபிஎம் தீவிர வாக்குச் சேகரிப்பு

கும்பகோணம், ஏப்.8 - ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மயிலாடு துறை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டி யிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர். சுதாவை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் திரு விடைமருதூர் தெற்கு ஒன்றியம் சார்பில் தீவிர வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது. இதில் கட்சியினர், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாச்சியார் கோவில், திருநறையூர், திருப்பந்துறை, கொத்தங்குடி, கோவனூர், ஆரியசேரி, கீரனூர், செம்மங்குடி, திருச்சேறை உள்ளிட்ட கிராமங்களுக்கு சுமார் 30 கிலோ மீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணித்து, கைச் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தனர். அப்போது மாதர் சங்கத்தினர் வேட்பாளர் சுதா வுக்கு ஆரத்தி எடுத்தும் வரவேற்று ஆத ரவு தெரிவித்தனர்.  வாக்குச் சேகரிக்கும் சுற்றுப் பய ணத்தில் சிபிஎம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான சி. ஜெயபால், ஒன்றியச் செயலாளர் எஸ். பழனி வேல், சிஐடியு பொறுப்பாளர் ஆர்.ஆரோக்கியதாஸ், ஒன்றியக் குழு உறுப்பி னர்கள், கிளை செயலாளர்கள், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் ஆனந்தன், செயலா ளர் முருகன், வாலிபர் சங்கம் ஒன்றியச் செய லாளர் பிரேம்நாத், விதொச ஒன்றியச் செயலா ளர் சத்தியராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.