districts

img

சோழம்பேட்டை கிராமத்தில் மூட்டை மூட்டையாக மிதந்த ரேசன் அரிசி சிபிஎம் கண்டனம்

மயிலாடுதுறை, ஜன.7 - மயிலாடுதுறையை அடுத்துள்ள சோழம்பேட்டை என்கிற கிராமத்தி லுள்ள இரு குட்டைகளில் ரேசன் கடை கள் மூலம் ஏழைகளுக்கு வழங்கப்படு கிற அரிசிகள் மூட்டை மூட்டையாக கிடந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோழம்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 5 ஆயிரத்துக்கும் அதிகமா னோர் வசித்து வருகின்றனர். பெரும்பா லான மக்கள் அரசு வழங்கும் இலவச ரேசன் அரிசியையே நம்பியே வாழும்  சூழலில் அக்கிராமத்திலுள்ள மாரியம் மன் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள  இரு குட்டைகளிலும் ரேசன் அரிசிகள் மூட்டை மூட்டையாக மிதப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக்குழு அலுவலகத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரை ராஜ், ப.மாரியப்பன், ஒன்றிய செயலா ளர் டி.ஜி.ரவி, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் சி.மேகநாதன், ஆர்.ரவீந்திரன்,  இயற்கை விவசாயி மாப்படுகை அ.ராம லிங்கம், கிளை செயலாளர் ராமதாஸ் ஆகியோர் அரிசி மூட்டைகள் மிதந்த பகு திக்கு சென்று ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து  மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் கூறுகையில், அன்றாட உணவுக்கே பெரும்பாலான குடும்பங்கள் அரசு வழங்கும் ரேசன் அரிசியைத்தான் நம்பி வாழும் சூழலில், சோழம்பேட்டை கிரா மத்தில் உள்ள குட்டைகளில் மூட்டை மூட்டையாக அரிசிகள் மிதப்பது அதிர்ச்சியளிக்கிறது. தரமான அரிசியை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், ரேசன் அரிசி கொட்டப்பட்டிருப்பது பல்வேறு சந்தே கங்களை எழுப்புகிறது. மாவட்ட மற்றும் வட்ட வழங்கல்  துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள் ளார். ஏழை மக்களுக்கு வழங்கப்படும்  அரிசிக்கு அளவீடு செய்து வழங்கும்  இக்காலத்தில் குளத்திலும், குட்டையி லும் தூக்கி வீசப்பட்டிருப்பதை அப் பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியுடன் பார்த்து  செல்கின்றனர்.

;