தஞ்சாவூர், ஏப்.24-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள இரண்டாம் புளிக்காடு ஊராட்சி செம்பருத்தி கிராமத்தில், கஜா புயலால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்டமாக 42 குடிசை வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது. பேராவூரணி அருகே உள்ள இரண்டாம்புளிக்காடு ஊராட்சி செம்பருத்தி கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. இவர்களது குடிசை வீடுகளை கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதிவீசிய கஜா புயலால் தரைமட்டமாகியது. இந்த பகுதிக்கு நிவாரணம் வழங்க வந்த அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கம், இராம்நாடு ராயல்ஸ் ரோட்டரி சங்கம், செந்தமிழ் மக்கள் ஸ்போர்ட்ஸ் & கல்ச்சரல் கனெக்ட்,வட கரோலினா, அமெரிக்கா இளங்கோ, மோகன், நாகர்கோவில் சவுத் ரோட்டரி சங்கம் இணைந்து குடியிருக்க இடம் இன்றி தவித்த இப்பகுதி மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிவெடுத்தனர். இதையடுத்து சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 42 குடிசை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு புதன்கிழமை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு ரோட்டரி அறக்கட்டளையின் மண்டல துணை ஒருங்கிணைப்பாளர் சங்க உடனடி ஆளுநர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். முன்னாள் ரோட்டரி ஆளுநர் ஜே.கே.குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வெ.பொன்ராஜ் கல்வெட்டை திறந்து வைத்து வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கதலைவர் டி.சோமசுந்தரம், செய லாளர் ஜி.டி.அருண்பிரசாத், திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.சேக் செய்யது புகாரி, நாகர் கோவில் சவுத் ரோட்டரி சங்கத் தலைவர் டி.மோகன்தாஸ், செயலாளர் யு.எஸ்.அஸ்வின், உறுப் பினர் டாக்டர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டாக்டர் விஜி ஏற்பாட்டில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 42 சோலார் மின் விளக்குகள் வழங்கப்பட்டன.