districts

img

மதுரை மக்களவைத் தொகுதி சமய பெரியோர், கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டிய சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன்

மதுரை, மார்ச் 23-  திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி  சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடே சன், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் சமய பெரியோர் களை வெள்ளியன்று நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.  ராஜ்குமார் தெருவில் உள்ள மதுரை டவுன்  காஜியார் செய்யது காஜா மைதீன் இல்லத்திற்கு சென்று  மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் சு.வெங்கடேசன் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி ஆதரவு திரட்டினார்.