districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவை

அவிநாசி, மார்ச்.11 அவிநாசியில் ஞாயிறன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பேரவை கூட்டத்தில் ரூ.3 லட்சத்தி 94  ஆயிரத்து 60 ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. அவிநாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய  குழு சார்பில் பேரவை கூட்டம் கட்சியின் தலைமை அலுவ லகத்தில் நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினர் வேலுச் சாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அரசியல்  நிலை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்  குழு உறுப்பினர் கே.காமராஜ் விளக்கி பேசினார். இதில்,  புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் குமாரசாமி, வையாபுரி ஆகியோர் ரூ.3 லட்சத்தி 94 ஆயிரத்து 60 ரூபாயை மாநிலக் குழு உறுப்பினர் காம ராஜரிடம் வழங்கினர். இதில், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் பி.முத்துசாமி, கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட் டக் குழு உறுப்பினர் பழனிசாமி, ஒன்றியக் குழு உறுப்பி னர்கள், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.