districts

img

தேர்தல் பணி அலுவலர்களுடன் ஆலோசனை

கரூர், மார்ச் 30 - கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அலு வலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுப் பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்கா வர் மற்றும் செலவின பார்வையாளர் போஸ் பாபு அல்லி ஆகியோர் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் பொதுப் பார்வை யாளர் தெரிவிக்கையில், “தேர்தல் அமைதி யான முறையில் நடத்திட ஒவ்வொரு பணிக்கும்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலர்கள்  அவர்களுக்கான பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பறக்கும்  படை குழு மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தொடர் தணிக்கையில் ஈடுபட வேண்டும்.  கரூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான தளவாய்பாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில், கரூர்  மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கரூர், அரவக் குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வேடச்சந்தூர், மணப் பாறை, விராலிமலை ஆகிய சட்டமன்றத் தொகுதி வாரியாக முதல் தளம், இரண்டாம் தளம் மற்றும் மூன்றாம் தளங்களில் வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட உள்ளன”  என்றார். தொடர்ந்து, வாக்குப்பதிவு முடிந்து அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இருந்தும் கொண்டு வரப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெற்றுக் கொள் வதற்கான இடம், மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்களை கொண்டு வரும் வாகனங்கள்  எந்த வழியே வந்து, எந்த வழியே செல்ல வேண்டும் என்பது குறித்த பாதுகாப்பு ஏற்பாடு களை தேர்தல் பொது பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர் ஆய்வு செய்தார்.