districts

img

திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் சிலைக்கும் விவேகா னந்தர் மண்டபத்துக்கும் நடுவே கண்ணாடி பாலம் அமைக்கும் பணி  

திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் சிலைக்கும் விவேகா னந்தர் மண்டபத்துக்கும் நடுவே கண்ணாடி பாலம் அமைக்கும் பணி  நடைபெற்று வருவதால் வழக்கமாக திரு வள்ளுவர் சிலைக்கு மலர் தூவி சிறப் பிக்கும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இத னால் தமிழ் ஆர்வலர்களும் சிலையை அருகில்  பார்க்க முடியாமல் சுற்றுலா பய ணிகளும் ஏமாற்றம் அடைந்தனர். குமரி கலைவிழா குமரி கலை விழா நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. இதில் பாராம்பரிய கலைஞர்களும், நாட்டுப்புற கலை ஞர்களும் கலந்து கொண்டு பல்வேறு வித மான கலைநிகழ்ச்சிகள் நடத்தி வரு கின்றனர். தற்போது பொங்கல் திரு நாளையொட்டி ஐந்து நாள் விடுமுறை, சபரிமலை பக்தர்கள் வருகை, பல்வேறு நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா  பயணி களுக்கு தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை களை கண்டுகளிப்பதற்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.  திற்பரப்பு அருவி குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்க மும் அதிகரித்து உள்ளது. இதனால், வெளியூர் சுற்றுலா பயணிகள் மட்டு மின்றி மாவட்ட மக்களும் அருவிகளுக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள் கின்றனர். அந்த வகையில், சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு நீர்வீழ்ச்சி யில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. மேலும், அரு கில் உள்ள சிறுவர் பூங்காவிலும் சிறு வர்கள் விளையாடி மகிழ்ந்தனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா வின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்  ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு நிர்விழ்ச்சிக்கு வந்த வண்ணம் உள்ளதால் திற்பரப்பு அருவி பகுதி களை  கட்டியுள்ளது. இதனால், உள்ளுர் வியாபாரி களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் உள்ளூர் மக்கள் முட்டம், சங்கு  துறை, லெமூர், குளச்சல் போன்ற கடற் கரைகளில் மாலை நேரத்தில் குடும் பத்துடன் வந்து மகிழ்ச்சியுடன் திரும்பி னர். மாவட்டம் முழுவதும் சுற்றுலா தலங் களில் பலத்த காவல் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.