districts

img

கான்கிரீட் தூண், தடுப்புச் சுவர்கள் அமைத்து அளக்குடி ஆற்றங்கரையை பலப்படுத்த கோரிக்கை

சீர்காழி, அக்.2 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளி டம் அருகே அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆறு மோதி திரும்பும் இடத்தில் ஒரு கி.மீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்டிருந்த கான்கிரீட் தடுப்புச் சுவர் சேதமடைந்தது. இந்த தடுப்புச்சுவர், கடந்த 2018 ஆம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் அதிக  வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, கான்கிரீட் தூண்களுடன் சுமார் 600  மீட்டர் தூரத்துக்கு உடைந்து நீருக்குள்  விழுந்தது. தொடர் வெள்ளப்பெருக் கால் ஆற்றங்கரை உடைய ஆரம்பித்தது.  பல்வேறு துறை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடைப்பை சரி  செய்தனர். ஆனால் அப்போது தற்காலி கமாக சரி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் கொள்ளி டம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படும்போது, கரை உடை யும் நிலை ஏற்படுகிறது. இதனால், பாறாங் கற்கள் மற்றும் பனை மரங்களை கொண்டு தண்ணீர் அரிப்பு ஏற்படுத் தும் இடத்தில் போட்டு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வருகிறது.  கடந்த மாதம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு தொடர்ந்து வந்து கொண்டி ருந்த நிலையில், உடைப்பு ஏற்பட்ட பகுதியில், மீண்டும் உடைப்பு ஏற்படா மல் இருக்கும் வகையில் மணல் மூட்டை களை போட்டு தற்காலிகமாக சரி செய்யப் பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டி லிருந்து அளக்குடி கான்கிரீட் சுவர் உடைப்பு ஏற்பட்டதிலிருந்து, அந்த கரை பகுதியை தற்காலிகமாக அடைக் கும் பணி மட்டுமே நடைபெற்று வரு கிறது.  இப்பகுதியில் நிரந்தரமாக கான் கிரீட் சுவர் அமைத்தால் மட்டுமே கரை யில் உடைப்பு ஏற்படாமல் பாதுகாக்க  முடியும். மேலும் அப்பகுதியில் வசிக் கும் கரையோர கிராம மக்களையும் பாதுகாக்க முடியும். எனவே தற்காலிக மாக சரி செய்யப்பட்ட கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை நிரந்தரமாக மேம்படுத்தும் வகையில், கான்கிரீட் தூண்கள் மற்றும் சுவர் அமைத்து பலப்படுத்த வேண்டும் என மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும்  கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;