மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியக் குழுவின் முன்னாள் செயலாளரும், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர்களில் ஒருவருமான தோழர் ஏ.எஸ்.ராமுவின் 17 ஆவது நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன், நகரக்குழு உறுப்பினர் ஏ.பி.தனுஷ்கோடி, ஒன்றியக்குழு உறுப்பினர் புஷ்பா, ஏ.எஸ்.ஆர். புதல்வர் சிவசேகரன், சிஐடியு தலைவர் ஜி.ரெகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.