districts

img

தோழர் ஏ.ராஜப்பா நினைவு தின பேரவை

தஞ்சாவூர், ஆக.31-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் தெற்கு ஒன்றியக்குழு சார்பில், அமரர் ஏ.ராஜப்பா நினைவு தின சிறப்பு பேரவை புதன்கிழமை பூதலூரில் நடைபெற்றது. முன்னதாக நந்தவனப்பட்டியில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன் தலைமையில், அமரர் ஏ.ராஜப்பா நினைவு தினக் கொடியேற்றப்பட்டது.  ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.வி.கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி, சிஐடியு மாவட்டப் பொருளாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த பேரவையில், “செப்.1 முதல் 5 வரை பொதுமக்களை சந்தித்து ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்வது, பூதலூரில் செப்.7 இல் நடைபெறுகிற ரயில் மறியல் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.