districts

img

தோழர் என்.சங்கரய்யா நினைவேந்தல்

மன்னார்குடி, டிச.11 - சுதந்திர போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா நினைவேந்தல் மற்றும் கவிஞர்  தமிழ் ஒளி நூற்றாண்டு நினைவு கருத்த ரங்கம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பில் நடை பெற்றது. எஸ்.ஆர்.வி.எஸ் தொடக்கப் பள்ளியில்  ஞாயிறன்று நடந்த நிகழ்ச்சிக்கு கிளைத்  தலைவர் சேது.சந்தானம் தலைமை வகித் தார். ‘பொதுவுடமை இயக்க வரலாற்றில் சங்கரய்யா’ என்ற தலைப்பில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி சிறப்பு ரையாற்றினார். ‘கவிஞர் தமிழ் ஒளி வாழ்வும்  கலை இலக்கிய பண்பும்’ என்ற தலைப்பில்  திரு.வி.க அரசுக் கல்லூரி தமிழ்த்துறை  பேராசிரியர் தி.நடராஜன் கருத்துரையாற்றி னார். முன்னதாக சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யா நினைவேந்தல் நிகழ்ச்சி நடை பெற்றது. கிளைச் செயலாளர் சி.சண்முகம்  வரவேற்றார். திருவாருர் மாவட்டத் தலை வர் மு.சௌந்தராஜன், பொருளாளர் மு.செல்வராஜ், மாவட்ட துணைச் செயலா ளர் கா.பிச்சைக்கண்ணு, பேராசிரியர் ந. லெனின் மற்றும் முற்போக்கு இடதுசாரி சிந்த னையாளர்கள் உரையாற்றினர்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.எஸ். பொன்முடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி னார். துணைத் தலைவர் ராஜா நன்றி கூறி னார்.