districts

img

தோழர் ஆர்.சாமிநாதன் நினைவு தினம்

கும்பகோணம், பிப்.23- தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய முன்னாள் செயலாளரும் மூத்த தோழருமான தோழர் ஆர்.சாமிநா தன் 13 ஆம் ஆண்டு நினைவு தின வெள்ளி யன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கும்பகோணம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில், அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத் தப்பட்டது. சிஐடியு ஒன்றியத் தலைவர் ஆரோக்கிய தாஸ் தலைமையில், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.பழனி வேல் செங்கோடியேற்றினார். ஒன்றிய குழு  உறுப்பினர்கள், தோழர் ஆர்.சாமநாதன் மகன்கள் இளங்கோவன், மணி உட்பட குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.