districts

img

டிச.22, 23 வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார்

கரூர், டிச.4 - தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில மாநாடு  டிசம்பர் 22, 23 தேதிகளில் சென்னை யில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்  என சங்கத்தின் மாநிலத் தலைவர்  எம்.பி.முருகையன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கரூர் மாவட்ட  4 ஆவது மாநாடு கரூரில் நடைபெற் றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட் டத் தலைவர் எம்.வைரப்பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் இரா.மோகன் ராஜ் அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். மத்திய செயற்குழு உறுப்பினர் ஒ.பி.ஆர்.செந்தில் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் சு.சங்கர லிங்கம் மாநாட்டை துவக்கி வைத்து  பேசினார். மாவட்டச் செயலாளர் ஆர். சண்முகம் வேலை அறிக்கையை முன்வைத்தார். மாவட்டப் பொரு ளாளர் த.சந்துரு வரவு- செலவு அறிக்கையை முன்வைத்தார்.  சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.எஸ்.அன்பழகன், இந்திய தொழிற் சங்க மையத்தின் கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், தமிழ்நாடு  கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா ளர் பொன்.ஜெயராம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத்  துணைத் தலைவர் எம்.செல்வராணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலை வர் எம்.பி.முருகையன் சிறப்புரை யாற்றினார். இதில் மாவட்ட, வட்ட,  ஒன்றிய நிர்வாகிகள் உட்பட நூற்றுக் கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். மாவட்ட துணைத் தலைவர் ஆ. சக்திவேல் நன்றி கூறினார்.

முன்னதாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.பி. முருகையன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:  டிசம்பர் 22, 23 தேதிகளில் 16  ஆவது மாநில மாநாடு சென்னை யில் நடைபெற உள்ளது. இந்த மாநில  மாநாட்டில் தமிழக முதல்வர் கலந்து  கொண்டு சிறப்புரையாற்ற இருக் கிறார்.  வருவாய்த்துறை என்பது மக்க ளுடன், மக்களாக இருக்கும் துறை யாகும். அரசின் மூளையாக செயல்ப டும் துறை என்று முன்னாள் முதல்வர்  கலைஞர் கூறியுள்ளார். மக்கள் பயன் படும் வகையில் கலைஞர் உரிமைத்  தொகை திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வரு வாய் துறையின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.  நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல்களை நடத்துவதும், பேரிடர்  காலங்களில் மக்களுக்கு சேர வேண்டிய நிவாரணத் தொகையை விரைந்து கொண்டு சேர்ப்பதும் வரு வாய்த்துறை தான். எனவே சிறப்பாக செயல்படும் வருவாய்த் துறை யின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும்.  பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தொடர்ந்து போராட் டங்களை நடத்தி வரும் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்களின் கோரிக்கை களையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.