பெரம்பலூர், மார்ச் 1 - திமுக பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளராக பொறுப்பு வகித்து வந்த குன்னம் சி.ராஜேந்திரன் வயது மூப்பின் காரணமாக பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண்டதால், புதிய மாவட்டச் செயலாளராக நெய் குப்பை வீ.ஜெகதீசன் நியமிக்கப்பட்டார். அதைத் தொ டர்ந்து வியாழனன்று சென்னை அண்ணா அறிவா லயத்தில் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்ச ருமான மு.க.ஸ்டாலினிடம் புதிய மாவட்டச் செயலாளர் வாழ்த்து பெற்றார். கழக பொதுச் செயலாளர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, டி.ஆர்.பாலு எம்.பி., துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி., போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பிரபாகரன், க.சொ.கண்ணன், மாநில பொறியாளர் அணி துணைச் செய லாளர் மு.பரமேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.