districts

img

மாநில அளவிலான உறைவாள் போட்டி: தஞ்சை அணிக்கு சாம்பியன் பட்டம்

கும்பகோணம், டிச.1 - கும்பகோணத்தில் நடந்த மாநில அளவிலான உறைவால் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தை தஞ்சை அணி பெற்றது.  மாநில அளவிலான உறை வாள் போட்டி கும்பகோணம் அருகே  அம்மாசத்திரம் ஸ்டார் பள்ளியில் 2  நாட்கள் நடைபெற்றன. இந்த போட்டியில் தமிழகத்தின் 22 மாவட் டங்களில் இருந்து 300-க்கும் மேற் பட்டோர் எட்டு பிரிவுகளாக போட்டி யிட்டனர். போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் முதலிடத்தை தஞ் சாவூர் அணி பெற்றது. இரண்டா வதாக ஈரோடு அணியும், மூன்றாவ தாக மயிலாடுதுறை அணியும் வெற்றி பெற்றன. 96 பேர் கோவா வில் டிசம்பர் 26 அன்று நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சிக்கு மாநில உறைவாள்  சங்க செயலாளர் செந்தில்குமார், தஞ்சை மாவட்ட நிர்வாகி செல்வம் உள்ளிட்ட குழுவினர் ஏற்பாடு செய்தி ருந்தனர். தமிழக அரசு தலைமை கொறடா கோவி செழியன் போட்டி களை துவக்கி வைத்தார். ஸ்டார் பள்ளி நிர்வாகி மார்டீன் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகி தமிழரசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குமார் உள்ளிட்டோர் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.