districts

img

மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் சுதாவை ஆதரித்து திருக்கடையூரில் பிரச்சாரம்

மயிலாடுதுறை, ஏப்.10 - மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடை யூரில் இந்தியா கூட்டணி சார்பில், மயி லாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பா ளர் வழக்கறிஞர் ஆர்.சுதா-வுக்கு வாக்குச்  சேகரித்து செவ்வாயன்று பிரச்சாரம் நடை பெற்றது. திமுக செம்பை மத்திய ஒன்றிய செய லாளர் அமுர்த.விஜயக்குமார் தலைமை வகித்தார். திமுக தலைமை கழக பேச்சா ளர் ஆவடி பாஸ்கர், காங்கிரஸ் வேட்பாளர்  ஆர்.சுதாவுக்கு வாக்குக் கேட்டு பிரச்சா ரம் செய்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர்  ஏ.ரவிச்சந்திரன், செம்பை ஒன்றிய துணை  பெருந்தலைவர் மைனர் பாஸ்கர், ஊராட்சி  தலைவர் ஜெயமாலதி சிவராஜ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.