districts

img

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்த விளக்கக் கூட்டம்

புதுக்கோட்டை/கும்பகோணம், ஜன.4 - போக்குவரத்துத் தொழிலாளர் களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் தொழிற் சங்கங்களின் சார்பில் வேலைநிறுத்த விளக்க வாயிற் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அரசுப் போக்குவரத்துக் கழகத் தில் வரவுக்கும் செலவுக்கும் இடைப்பட்ட  தொகையை மற்ற துறைகளுக்கு வழங்குவதைப் போல அரசே வழங்க  வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை  ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையே தொடர வேண்டும். ஓய்வு  பெற்ற தொழிலாளர்களின் 98 மாத  பஞ்சப்படி மற்றும் இதர பணப்பலன் களை நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டும். வாரிசு வேலை மற்றும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்  பணியிடங்களை நிரப்ப வேண்டும். 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி அரசுப் போக்கு வரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை பணிமனை முன்பு வியாழக்கிழமை அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் வேலை நிறுத்த விளக்க வாயிற் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு போராட்டக் குழு  அமைப்பாளர் ஆர்.மணிமாறன் தலைமை  வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டப் பொருளாளர் எஸ். பாலசுப்பிரமணியன், ஏடிபி மாவட்ட உதவி செயலாளர் எஸ்.செபஸ்தியான் உள்ளிட்ட பலர் பேசினர். கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப் புகள் சார்பில், போக்குவரத்து கழக  கும்பகோணம் தலைமையகம் முன்பு  வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்திற்கு அரசு போக்குவரத்து (சிஐடியு) தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். சங்க தலைவர் காரல் மார்க்ஸ், பொருளாளர் ராம சாமி, சங்க ஸ்தாபன தலைவர் ஆர்.மனோ கரன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.