districts

img

பாதுகாப்போம் பச்சை பூமியை நூல் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை,  ஜூன் 3-  

    ஆண்டனீஸ் ஸ்போக் கன் இங்லீஷ் அகாடமியின் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழா மற்றும் பச்சை பூமி அமைப்பின் சார்பில் எழுத்தாளர் ஆண்டனி எழுதிய ‘‘பாதுகாப்போம் பச்சை பூமியை’’ என்ற நூல் வெளியீட்டு விழா புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

   விழாவிற்கு கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். விழாவில் கலந்துகொண்டு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நூலை வெளியிட, வல்லத்திராகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் குமார் பெற்றுக்கொண்டார்.  

   விழாவிற்கு முன்னிலை வகித்து கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, புதுக்கோட்டைத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, துணை ஆட்சியர் கே.கருணாகரன் ஆகியோர் பாராட்டிப் பேசினார்.

   ஓய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, திமுக ஒன்றியச் செயலாளர் அரு.வடிவேல், கவிஞர் முத்துப்பாண்டியன் கவிஞர் மு,கீதா, கவிஞர் சு.மதியழகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக பச்சை பூமி அமைப்பின் தலைவர் வேங்கை ஆரோன் வரவேற்க, நூல் ஆசிரியர் ஆண்டனி நன்றி கூறினார்.