districts

img

நல்லாசிரியர் விருது பெற்ற ஸ்ரீகண்டபுரம் அரசுப் பள்ளி ஆசிரியைக்கு பாராட்டு

மயிலாடுதுறை, செப்.8 - மயிலாடுதுறை மாவட் டம், குத்தாலம் வட்டம், ஸ்ரீகண்டபுரம் அரசு மேல் நிலைப் பள்ளி ஆசிரியைக்கு  டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டுள்ளது. இப்பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஆர்.ஜி.கலைமதி. இவர்  கடந்த 32 ஆண்டுகளாக ஆசிரி யையாக பணியாற்றி வரு கிறார். மேலும் கடந்த 20  ஆண்டுகளாக பாரத சாரண,  சாரணியர் இயக்கத்திலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு, பல்வேறு மாநி லங்களில் நடந்த பயிற்சி களில் தமிழகத்தின் பிரதி நிதியாக கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்.      மயிலாடுதுறை கல்வி  மாவட்டத்தின் மாவட்ட சாரணிய பயிற்சி ஆணைய ராகவும் பொறுப்பு வகித்து வரும் இவர், மதுரை, ஆரணி, திருவாரூர் போன்ற பிற மாவட்டத்திலுள்ள ஆசி ரியைகளுக்கு சாரணிய வழி காட்டி தலைவிக்கான பயிற்சி முகாம்களின் தலை வியாக பொறுப்பு வகித்து  பல சாரணிய ஆசிரியை களை உருவாக்கியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தி லிருந்து பல மாணவிகள், ஆளுநர் மற்றும் ஜனாதிபதி யிடம் விருது பெறவும் உறு துணையாக இருந்துள்ளார்.  மாணவர்களுக்கு படிப்பு மட்டுமின்றி தோட்டக்கலை, கைவினைப் பொருட்கள் செய்தல் போன்ற பயிற்சி களையும் அளித்து வருகிறார்.  இவரின் சேவையை பாராட்டி செப்.5 ஆசிரியர் தினத்தன்று சென்னை கலை வாணர் அரங்கில் நடை பெற்ற ஆசிரியர் தின விழா வில், தமிழக பள்ளிக்கல்வித்  துறையின் மிக உயரிய விரு தான, நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கான சான்றிதழ், பதக்கம் மற்றும் ரொக்கப் பரி சினை தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு  மற்றும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கி கௌர வித்துள்ளனர். நல்லாசிரியை ஆர்.ஜி. கலைமதியை தலைமை யாசிரியர் மதிவாணன், ஊராட்சி மன்ற தலைவர்  வெண்ணிலா ராஜ்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முகமது இக்பால், துணைத் தலைவர் ராம தாஸ், ஆசிரியர்கள், பெற் றோர்கள் பாராட்டியுள்ளனர்.

;