districts

14 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லை: பெல் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம்

திருச்சிராப்பள்ளி, ஜன.19 - திருச்சி பெல் தொழிற்சா லையில் பெல் வட்ட கூட்டுறவு சொசைட்டி மூலம் பல்வேறு பணிகளுக்கு 40 ஆண்டுகளாக சுமார் 2 ஆயி ரம் பேர் வேலை செய்து வந்தனர்.  இந்நிலையில் பணி ஓய்வு, பணியின் போது இறப்பு என பல்வேறு கார ணங்களால், தற்போது 700 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர் களுக்கு பெல் நிர்வாகம் கடந்த 14 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்க வில்லை. பெல் மருத்துவ மனையில் மருத்துவ வசதி வழங்கவில்லை.  மேலும் ராணிப்பேட்டை யில் உள்ள பெல் நிறுவ னத்தில், இடைக்காலத்தில் வழங்கப்பட்ட ரூ. 15 ஆயி ரம் என மாதந்தோறும் வழங்குவது போல், திருச்சி  பெல் நிறுவனமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங் கள் சார்பில் ஜன.19 அன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட் டம் நடைபெறும் என அறி விக்கப்பட்டது. இதற்கான கடிதம் கடந்த  ஜன.13 அன்று பெல்  நிர்வாகத்திடம் கொடுக்கப் பட்டது. இந்நிலையில் பெல் நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், வெள்ளிக் கிழமை காலை பெல் மெயின்  கேட் முன்பு போராட்டத்தை துவக்கினர். போராட்டத்திற்கு சிஐ டியு செல்வராஜ், திராவிடர் கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் சேகர், அம்பேத்கர் யூனியன் முரு கேசன், ஐஎன்டியுசி சங்க  பூபதி, எம்எல்எப் முருகா னந்தம் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மருத்துவப் பணி, பாதுகாப்பு பணி தொழிலாளர்களை தவிர  600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இத னால் பெல் நிறுவனத்தின் பல  பிரிவுகளில் வேலை பாதிப்பு  ஏற்பட்டுள்ளது.