districts

img

விழிப்புணர்வு வாகனம் துவக்கி வைப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வெள்ளியன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு வாகனமானது, மயிலாடுதுறை, செம்பனார்கோவில், கொள்ளிடம், குத்தாலம், சீர்காழி ஆகிய வட்டாரத்திற்குட்பட்ட கிராமங்களுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.