districts

img

தஞ்சாவூரில் விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர், ஜூலை 11 -  தஞ்சாவூர் மாவட்ட, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, மாவட்ட குடும்ப நலச் செயலகம் சார்பில், உலக மக்கள் தொகை நாளை முன்னிட்டு, உலக மக்கள்  தொகை விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் புகைவண்டி நிலையத்தில் இருந்து, தஞ்சா வூர் மருத்துவக் கல்லூரி செவிலியர்கள், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் சுமார்  200க்கும் மேற்பட்டோர் அரசு இராஜா மிராசுதார் மருத்துவ மனை வரை நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டனர்.  முன்னதாக உலக மக்கள் தொகை விழிப்புணர்வு  உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரசு இராஜா மிராசுதார் மருத்துவமனை, மண்டல கண் சிகிச்சை மைய கூட்டரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது.    இந்நிகழ்ச்சியில், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். இராமநாதன், இணை இயக்குநர் (நலப் பணிகள்) மரு.செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.