தஞ்சாவூர், செப்.11- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள கிங்கு சிட்டோரியா ஸ்போர்ட்ஸ் கராத்தே டு இந்தியா தற்காப்பு கலை பயிற்சி பள்ளி சார்பில், மாணவர்களுக்கு தகுதிப் பட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் மற்றும் பயிற்சியாளர் பி. பாரதிதாசன் தலைமை வகித் தார். தலைமை பயிற்சி யாளர் எஸ்.அன்பரசன் 60 மாணவ, மாணவிகளுக்கு கராத்தேயில், பல்வேறு வண்ணப் பட்டைகளை வழங்கினார். கராத்தே பயிற்றுநர்கள் எம்.சுரேஷ் குமார், ஒய்.ஆபிரகாம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக கராத்தே பயிற்சியாளர் டி.சிதம்பரம், தர்மாம்பாள் வீரப்பன் பப்ளிக் பள்ளி முதல்வர் எஸ்.அருளானந்தம், பாரதி வித்யாலயா பள்ளி தாளாளர் ஆர்.சுரேந்தர், தஞ்சா வூர் அன்னை வேளாங் கண்ணி கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் என்.பிர காஷ், மல்லிகா பர்னிச்சர் மேலாளர் எஸ்.ரவிக்குமார், இந்திய ஜனநாயக வாலி பர் சங்க தஞ்சை மாவட்டச் செயலாளர் ஆம்பல் துரை. ஏசுராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாண வர்களை வாழ்த்தினர்.