districts

img

கல்விச் சேவைக்கு பாராட்டு கார்த்தி வித்யாலயா கல்வி குழும தலைவர் கார்த்திகேயனுக்கு விருது

கும்பகோணம் டிச.9 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா கல்வி குழுமத் தலை வர் எஸ்.ஏ.கார்த்திகேயனின் சிறந்த கல்வி  பணியினை பாராட்டி விருது வழங்கப் பட்டது.  மும்பையில் ஸ்டார் எஜூகேசன் (STAR EDUCATION) விருது 2023  வழங்கும் விழா  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு  மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி முதல்வர்கள்  கலந்து கொண்டனர். பள்ளியில் ‘சிறந்த மேலாண்மை அமைப்பு’ என்ற தலைப்பில், சிறந்த கல்வி சேவைக்கான விருதை கும்ப கோணம் புறவழிச் சாலையில் இயங்கும் கார்த்தி வித்யாலயா கல்வி குழுமத் தலை வர் எஸ்.ஏ.கார்த்திகேயனுக்கு வழங்கி கௌர வித்து உள்ளது. கிராமப்புற மாணவர்களும் சர்வதேச தரத்திலான கல்வியை பெறும் வகையில்,  உயரிய நோக்கத்துடன் இப்பள்ளியை உரு வாக்கியதற்காக, தலைவர் கார்த்திகேய னுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. மேலும்  பிஎஸ்பிஏ (PSPA) மற்றும் எச்பிஎஸ்யு (HBSU)  கல்விச் சிறப்பு விருதுகளையும் வழங்கி கவுரவித்துள்ளது.  பின்னர் நடந்த பள்ளி முதல்வர்கள் மற்றும் கல்வியாளர்களின் தேசிய மாநாட் டில், கும்பகோணம் கார்த்தி வித்யாலயா கல்வி குழுமத் தலைவர் எஸ்.ஏ. கார்த்தி கேயனுக்கு ‘சிறப்பு முதல்வர்’ விருதும் வழங்கப்பட்டது.