districts

img

அறிவியல் இயக்கத்தின் வானியல் திருவிழா

புதுக்கோட்டை,  ஏப்.26 - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வானி யல் திருவிழா புதுக்கோட் டையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மக்க ளிடையே வானியல் குறித்த  ஆர்வத்தை ஏற்படுத்த வும், அறிவியல் மனப்பான் மையை உருவாக்கவும், குழந்தைகளுக்கு ஆய்வு மனப்பான்மையைத் தூண்டும் விதமாகவும் ஒவ் வொரு வாரமும் நகராட்சி  மற்றும் கிராமப் பகுதிகளில் வானியல் நிகழ்வுகள் நடத்துவது என்று திட்ட மிடப்பட்டது.  இதனொரு பகுதியாக, புதுக்கோட்டை பிரகதாம் பாள் மேல்நிலைப் பள்ளியில்  500-க்கும் மேற்பட்ட குழந் தைகள், பெற்றோர்களுக்கு மூன்று தொலைநோக்கி மூலம் நிலவு, நட்சத்திரக் கூட்டங்கள், கோள்கள் குறித்து விளக்கப்பட்டது.  அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன், மாவட்டக்  கருத்தாளர் செல்வராஜ், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி  நிறுவன விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார், மாவட்ட குழந் தைகள் நலக்குழு தலைவர்  க.சதாசிவம் ஆகியோர்  பங்கேற்று விளக்கமளித்த னர். நிகழ்வை அறிவியல் இயக்க மாவட்டச் செயலா ளர் எம்.வீரமுத்து ஒருங்கி ணைத்தார். நிர்வாகிகள் பங்கேற்றனர்.

;